• Di.. Mai 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திட்டினாரு…தீர்த்துட்டேன்! முதலாளியை கொலை செய்த காவலாளி!

Feb. 2, 2023

தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தாய்லாந்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அதன்படி நிறுவனம் ஒன்றின் காவலாளியை நித்தமும் திட்டித் தீர்த்து வந்ததால் அந்த காவலாளி கையாலேயே முதலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டிருக்கிறது.

சாவத் ஸ்ரீராட்சலாவ் என்ற 44 வயதுடைய காவலாளி அரோம் பனன் என்ற 56 வயதுடையவரின் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சாவத்திடம் அரோம் எப்போதும் கண்டிப்புடனும் கடுமையான சொற்களை கொண்டு நடத்தி வந்து வந்திருக்கிறார். பல மணிநேரம் வேலையும் பார்க்க வைத்திருக்கிறார். அவ்வப்போது வசைப்பாடுவதையும் அரோம் வழக்கமாக கொண்டிருக்கிறார். இவையெல்லாம் சாவத்தின் மனதில் ஆழமாக பதிந்துப்போக ஒரு கட்டத்தில் தனது முதலாளி ஆரோமின் நெஞ்சிலேயே கத்தியால் குத்தியிருக்கிறார். இது குறித்து தகவலிறிந்து சென்ற தாய்லாந்து போலீசார் சாவத்தை கைது செய்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed