• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

10 மீட்டர் நகர்ந்துள்ள துருக்கி நாடு! 30000 தாண்டும் பலி எண்ணிக்கை.

Feb 9, 2023

நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக இத்தாலி நிலநடுக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது.

கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

துருக்கியில் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

இது அதிகாரபூர்வமான பலி எண்ணிக்கை மட்டும்தான். உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 30 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிரியாவில் 5700 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக காயம் அடைந்துள்ளனர்.

10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பு

துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்துள்ளது - 30000 தாண்டும் பலி எண்ணிக்கை - ஆராய்ச்சியின் பின்னணி | Turkey Earthquake Death Count

துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும்.

துருக்கி நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டுள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்துள்ளன.

துருக்கி நிலநடுக்கத்தில்

துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்துள்ளது - 30000 தாண்டும் பலி எண்ணிக்கை - ஆராய்ச்சியின் பின்னணி | Turkey Earthquake Death Count

100 கிமீ தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டுள்ளது. நாம் வாழும் பூமியின் நிலநடுக்கங்கள் பூமி தகடுகள் திடீரென நகர்ந்து செல்வதால் ஏற்படும்.

இந்த துருக்கி நிலநடுக்கத்தில் அரேபியன் தகடு அன்டோலியன் தகட்டின் மீது நகர்ந்து உள்ளது. அடுத்தடுத்து மூன்று முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதோடு ஒரு முறை தகடுகள் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் தகடுகளும் நகரும் சூழ்நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும்.

10 மீட்டர் வரை நகர்ந்துள்ளன

துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்துள்ளது - 30000 தாண்டும் பலி எண்ணிக்கை - ஆராய்ச்சியின் பின்னணி | Turkey Earthquake Death Count

இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் காணப்படும். இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள்.

துருக்கி நிலநடுக்கத்தில் இப்படித்தான் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி நிலநடுக்க ஆய்வாளர், புவியியல் வல்லுனர் கார்லோ டோஃலோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியின் நில அடுக்குகள் 10 மீட்டர் வரை நகர்ந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.

5-6 சிறிய நிலநடுக்கங்கள்

துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்துள்ளது - 30000 தாண்டும் பலி எண்ணிக்கை - ஆராய்ச்சியின் பின்னணி | Turkey Earthquake Death Count

சிரியா இதைவிட கொஞ்சம் குறைவாக நகர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது.

மொத்தம் 190 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் நிலம் அப்படியே இடம் பெயர்ந்து, வெடித்துள்ளது.

இதனால் மொத்த துருக்கியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் வெளியே தெரிந்த நிலநடுக்கத்தை விட தெரியாத நிலநடுக்கங்கள் 5-6 சிறிய அளவில் இடை இடையே ஏற்பட்டுள்ளன.

இதனால் துருக்கி தற்போது இருக்கும் இடத்தில் இருந்து தென் மேற்கு திசையில் நகர்ந்து உள்ளது, என்று அந்த ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed