கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரிது வருகின்றது.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும் வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில்
சுவிஸ் நாட்டில் இயங்கிவரும் moon boys club இன் பொருளாளர் #அருண் #சுந்தரலிங்கம் ஊடாக தமது உறவுகளுக்காக அரிசி,மா,சீனி,தேயிலை,பருப்பு, மீன்ரின் என ஐயாயிரம்(5000) ரூபா பெறுமதியான பொருட்களை 40 குடும்பத்தினர்களுக்கு சிறுப்பிட்டியூர் கதிரவேலு #சத்தியதாஸ் மூலமாக அவரது இல்லத்தில் கிராம சேவையாளர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இவருக்கு சிறுப்பிட்டி இணையம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது

Von Admin