சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12

 வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால்.

இந்த வருட ஆலய அலங்கார உற்சவத்தை நிறுத்தி கும்பாபிஷேகம் செய்வதென்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும் சேர்ந்து உத்தேசித்தபடி ஆலயத்தில் உள்ள திருத்த வேலைகள் எவை என கலந்துரையாடப்பட்டது. அதில் முதல் கட்டமாக

1.ஆலயத்தில் உள்ள அனைத்து சுவாமிகளின் இருப்பிடத்தின் மேற்பகுதி புனரமைப்பு

2.வசந்த மண்டபம்

3. சிவலிங்க இருப்பிடப் புனர்நிர்மாணம்

4. சமையலறை புனரமைப்பு

5. கூரைகள் புனரமைப்பு

6.வர்ணப்பூச்சிடல்

7.மின்சார வேலைகள்

8.தேர் திருத்தம்

9. முன் மண்டப புனரமைப்பு

ஆகிய வேலைகள் செய்ய தீர்மானித்து இருப்பதால் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு  சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அடியவர்களிடம் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Von Admin