இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் நடைபெற மாட்டாதெனவும் எனவே மாற்று பிரயாண ஒழுங்குகளை மேற்காள்ளுமாறும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை உல்லாச பயண அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே திணைக்களத்தால் நாட்டில் ரயில் சேவைகள் செயற்படுத்தப்படமாட்டாது என்பதை மிகுந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.எனவே உங்களது பயணத்திற் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்.

அத்துடன் இது தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்.இது தொடர்பான மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும். எனவே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.