யாழ்.கந்தர்மடம் சந்தியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.நகரிலிருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.