இளவாலையில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளவாலைச் சந்தியில் உள்ள காணி ஒன்றின் கிணற்றில் இருந்தே இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளரின் கொல்வின் என்ற 32 வயது இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் நேற்று சிலருடன் இணைந்து விருந்து ஒன்றில் கலந்துகொண்டார் என்று கூறப்படுகின்றது.

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

Von Admin