பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, திரையுலகினரிடையே கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரைப்ப்பு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர்பி.ராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார்.

மேலும், தமிழ் மாத்திரமின்றி பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.  

இதேவேளை, திருடா திருடி திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தில், யுத்தம் செய், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் மாணிக்க விநாயகம் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Von Admin