• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திருடப்பட்ட சிலைகள் கொழும்பில் மீட்பு.

Dez 26, 2021

யாழ்ப்பாணத்திலிருந்து திருடப்பட்ட 15 இற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் விசேட பொலிஸ் குழு மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் – பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து விக்கிரகங்கள் கடந்த சில நாட்களில் திருடிச் செல்லப்பட்டிருந்தது.

மேலும் குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் திருடப்படும் சிலைகள் கொழும்புக்கு கடத்தப்பட்டமை தொியவந்துள்ளது.

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் கொழும்பு சென்றிருந்த விசேட பொலிஸ் குழு, அங்கு யாழ்ப்பாணத்திலிருந்து கடத்தப்பட்ட சுமார் 15 இற்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டிருக்கின்றனர்.

இதேவேளை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர் தலைமறைவாகியுள்ள நிலையில், மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்.வலி, வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள்ளிருந்து திருடப்பட்டவை எனவும், மீட்கப்பட்ட சிலைகள் யாழ்ப்பாணம் எடுத்துவரப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed