• Di.. Mai 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொழும்பில் மரணத்தில் முடிந்த நத்தார் விருந்து.

Dez. 27, 2021

கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்று நடத்தியுள்ள நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞனை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கடுமையான கோபமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் நடத்திய வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.