தெல்லிப்பழை, மாசியப்பிட்டியில் மரம் வீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

தெல்லிப்பழையைச் சேர்ந்த எட்வேட் மதிவண்ணன் என்ற 41 வயதுக் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

மூவருடன் சேர்ந்த   மரம் ஒன்றைத் தறித்தபோது, மரம் அவர் மீது சரிந்து வீழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Von Admin