• Di.. März 25th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில்.

Dez. 28, 2021

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்  நிலையில் குறித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பெண்னின் சடலம் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில்  பாலமொன்றின் கீழ்  காணப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.  இந்நிலையில் காணாமல்போன பெண் லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவர் கடந்த 3 வருடங்களின் முன் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார். தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றயை தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து  குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரியைமாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த  நிலையில்  வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

அதேவேளை  காணாமல் போயுள்ள பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed