கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலத்தை பத்து நாட்களில் இருந்து ஐந்து நாட்களாகக் குறைத்துள்ளது அமெரிக்க அரசு.

இந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் பிறர் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என்றாலும், அமெரிக்காவில் பல தொழில்முனைவோரும், கொள்கை வகுப்பாளர்களும் இவற்றைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறார்கள்.

Von Admin