யாழ்.போதனா வைத்தியசாலையில் தலைவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில நாட்களாகத் தீவிர தலை வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் சிரேஸ்குமார் ஞானசீலி (வயது 37) என்ற பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.