• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்தியர்: தெரியவந்த தகவல்கள்

Dez 29, 2021

ஜேர்மனியில், இந்தியாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் ஒன்றில் தொடர்புடைய இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மும்பை, டில்லி முதலிய இடங்களிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவரான Jaswinder Singh Multani என்பவரே கைது செய்யப்பட்டுள்ள நபராவார்.

டிசம்பர் மாதம் 23ஆம் திகதி, இந்தியாவின் லூதியானா என்ற நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார், ஐந்துபேர் வரை காயமடைந்தனர்.

பொலிஸ் விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியிலும், மற்றொருவர் பாகிஸ்தானிலும் இருப்பது தெரியவந்தது.

அதன்படி, ஜேர்மனியில் வாழ்ந்து வந்த Jaswinder Singh Multaniயை இந்தியாவின் கோரிக்கையின்பேரில், ஜேர்மன் பொலிசார் Erfurt என்ற இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed