• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டனில் ஒரு மணி நேரத்தில் இரு சிறுவர்கள் கொலை!

Dez 31, 2021

பிரித்தானிய தலைநகரான லண்டனில் ஒரு மணிநேர இடைவெளியில் 2 பதின்ம வயது சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு கொலைகளுடன், 2021-ல் பிரித்தானிய தலைநகரில் பதின்வயதினரின் கொலைகளின் எண்ணிக்கை 30-ஆக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கொலை சம்பவங்கள் லண்டனில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் என கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை குரோய்டனில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு 15 வயது இளைஞன் குத்திக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்த 49 நிமிடங்களுக்குப் பிறகு, ஹில்லிங்டனில், யீவ்ஸ்லியில் உள்ள ஹீதர் லேனுக்கு அருகில் உள்ள Philpotts Farm Open Space-ல் நடந்த ஒரு தாக்குதலில் „பஞ்சர் காயத்தால்“ பாதிக்கப்பட்ட 16 வயது இளைஞன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

லண்டனில் இதுவரையில் அதிகபட்சமாக 2008-ல் 29 ஆக இருந்த பதின்பருவக் கொலைகளின் எண்ணிக்கை, 2021-ல் 30 என்ற புதிய உச்சத்தைத் தாண்டியுள்ளது. ஹில்லிங்டனில், இரவு 7.34 மணிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையினர் காயமடைந்த ஒரு ஆண் பற்றி பொலிஸாருக்கு புகார் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், 16 வயது சிறுவன் துளையிடப்பட்ட காயத்தால் அவதிப்படுவதைக் கண்டனர். மருத்துவ உதவியாளர்கள் முயற்சி செய்த போதிலும், அவர் இரவு 8.25 மணியளவில் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

மேலும், உயிரிழந்த சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளால் அவர்களுக்கு ஆதரவளிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குரோய்டனில் நடந்த சம்பவம், Ashburton பூங்காவில் இரவு 7 மணிக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சேவை வருவதற்குள் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர், ஆனால் அவர் இரவு 7.36 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed