இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு -காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து தேவி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.

இதனால், மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் 13 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சம்பவத்தில் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மற்றும் ஜம்முவில் இருந்து வந்த பக்தர்கள் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Gallery

Von Admin