• So. Nov 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கசூரினா கடலில் காணாமல் போயுள்ள கோண்டாவில் மாணவன்

Jan 2, 2022

காரைநகர் கசூரினா கடலில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 (1) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி பகுதியைச் சேர்ந்த யோகராசா யோகீசன் (18) என்ற மாணவனே நீரில் மூழ்கி, காணாமல் போயுள்ளார்.

புத்தாண்டு விடுமுறையான இன்று பிற்பகல் கோண்டாவிலை சேர்ந்த இளைஞர் குழுவொன்று, வாடகை வாகனம் ஒன்றில் காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது இரண்டு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இளைஞர்கள் சத்தமிட்டதையடுத்து, விரைந்த செயற்பட்ட கடற்படையினர் ஒரு இளைஞனை காப்பாற்றினர். மற்றைய இளைஞனை காப்பாற்ற முடியவில்லை.

பொதுமக்களும், கடற்படையினரும்தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டபோதும், இளைஞன் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

நீண்ட நேரத்தின் பின்னர் அவருடைய சடலம் கரையொதுங்கியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed