வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்தார்.

குறித்த பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஊடக நிறுவனமொன்றின் கப் ரக வாகனமும் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த ரயீவன் (வயது 35) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்தார். அவர் (31)தினம் தனது பிறந்த நாளினை கொண்டாயிருந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Von Admin