இன்று காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் யாழ்.நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் சமுத்திரதேவி படகு நடுக்கடலில் பழுதடைந்த நிலையிலும் பணியாளர்களின் முயற்சியால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது.

சுக்கான் உடைந்தமையினால் இடைநடுவில் பயணிகளை வடதாரகைப்படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும் பல இடையூறுகள் மத்தியிலும் வடதாரகைப்படகு இழுத்து செல்லப்பட்டது.

நீண்ட நேர பயணத்திற்கு பின்னர் பயணிகள் குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Von Admin