வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ்வரை குறைவடையகூடிய சாத்தியகூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

Von Admin