• Mi.. Juni 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.மாநகருக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தான நுளம்பு!

Jan. 8, 2022

யாழ்.மாநகருக்குள் “அனோபீலிஸ் டிபென்ஸி” என்ற புதியவகை மலோியா நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இது மிகவும் பாதகமான அனர்த்த நிலை என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள சிலருக்கு மலேரியா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசேட சைவத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்.மாநகர எல்லையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்ப துரிதமாக பரவும் துரிதமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.