யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிகுண்டை அவதானித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த வெடிபொருள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.