நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கில் நேற்றுக் காலை நடந்துள்ளது.

விஜயேந்திரன் ஆரணன் (வயது-04) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தோட்டத்துக்குச் சென்ற சிறுவன் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். சிறுவனைக் காணாது பெற்றோர் தேடியபோது சிறுவன் கிணற்றில் சடலமாகக் காணப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Von Admin