சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பினால் உயிரிழந்தவர்களுக்கும், காயங்களுக்கு உள்ளானவர்களுக்கும் 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதுடன், நிவாரண நட்டஈடு வழங்கும் யோசனையை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் அகில இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு ஒன்றியத்தினர் முன்வைத்துள்ளனர்.

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை நுகர்வோர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடப்பட்டனர்.

சமையல் எரிவாயு சார் விபத்தினால் உயிரிழந்த குண்டசாலை பிரதேச பெண்ணின் கணவரும் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

அகில இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு ஒன்றியத்தினர் முன்வைத்த யோசனைக்கமைய  சமையல் எரிவாயு விபத்தினால் உயிரிழந்த மற்றும் தீ காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு 5 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுவதுடன், நிவாரண நட்டமும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது