திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் வீரபாண்டி பழகரை தோட்டத்தை சேர்ந்தவர் சரண் (18). இவர் கோவையில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் புதுக்கோட்டையை சேர்ந்த வினிதா (18). இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த, இரு மாதம் முன்பு, தனது காதலியை அழைத்து வந்து திருமணம் செய்து, திருப்பூர் மாவட்டம் இடுவாயில் தங்கியிருந்தார் சரண். இந்நிலையில் 2 நாட்கள் முன்பு, சரண் தனது பெற்றோரிடம் திருமணம் குறித்து தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், படிப்பை தொடருமாறு அறிவுரை கூறியுள்ளனர். புதுக்கோட்டை சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேசி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே குடும்பத்தினர் வந்து நம்மை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில், இருவரும் கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதல் ஜோடிகள் பயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Von Admin