ஐரோப்பாவில் அடுத்த இரண்டு மாதங்களில் பாதிக்கும் அதிகமானோர் ஓமைக்ரோன் தொற்றினால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா தொற்று நிலவரம் நீடித்தால் அத்தகைய சூழல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

26 ஐரோப்பிய நாடுகளில் வாரந்தோறும் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினருக்குப் புதிதாகக் கொரோனா தொற்று பதிவாவதாக அண்மைத் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாண்டின் முதல் வாரத்திலேயே ஐரோப்பாவில் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமைக்ரோன் வைரஸ் மேலும் விரைவாகத் தொற்றக்கூடியது என்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்கூட பாதிக்கப்படுகின்றனர் என்றும் தகவல்கள் புலப்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர்.