விளைச்சல் குறைந்துள்ளதால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 80 ரூபா தொடக்கம் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகக் குறைந்திருந்தது.

எவ்வாறாயினும், உரப்பிரச்சினை காரணமாக தோட்டங்களில் தேங்காயின் விளைச்சல் குறைவடைந்துள்ளதால், தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டின் மாதாந்த தேங்காய் உற்பத்தி 200 முதல் 250 மில்லியன் தேங்காய்களாகும்.

Von Admin