நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபா பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட, நிதி மோசடி பிரிவின் பொலிஸ் அலுவலர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, தமது வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக, யக்கலமுல்லை பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் அலுவலர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சந்தேகநபரும், முறைப்பாட்டாளரும், யக்கலமுல்லை பொலிஸ்துறையில் கடமையாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக, குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த நபரின் ஏ.ரி.எம். அட்டையப் பயன்படுத்தி, தானியங்கி இயந்திரத்திலிருந்து, சந்தேகநபர் பணத்தைக் கொள்ளையடிக்கும் காட்சி அவதானிக்கப்பட்டதை அடுத்து, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

Von Admin