இளவாலைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நபர் சங்கானை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது விலை பகுதியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் சங்கானை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக அவதானிக்கப்பட்டு நிலையில் குறித்த நபர் இளவாலைப் பகுதியிலிருந்து காணாமல் போனவரின் சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin