• Di.. Feb. 18th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் திடீரென இடம்பெற்ற தீ விபத்து

Jan. 14, 2022

கனடாவின் ஒட்டாவாவில் 15 முதல் 18 மீற்றர் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் தொடர் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள மெரிவல் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்று நேற்று மதியம் மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் Eastway Tank Pump & Meter Ltd இல் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் பெரிய தொட்டிகள் பொருத்தப்பட்ட டிரக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.

சம்பவத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், 15 முதல் 18 மீட்டர் உயரத்தில் தீ சத்தம் கேட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed