யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும் நிலையிலும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப எமது பண்பாட்டு விழுமியங்களை எம் இளைய சமூகத்திற்கு பரப்பி அவர்களை அதற்குள் அரவணைத்துக் கொண்டுவரவேண்டிய மிகப்பெரும் பொறுப்புகள் உடையவர்களாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் யேர்மனியில் அனைத்துத் தமிழாலயங்களிலும் தமிழர் திருநாள் புதுப்பானை வைத்து பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

Von Admin