உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தயாரித்தாலும் வெவ்வேறு வேரியண்டுகள் மாறி மக்களை தாக்கி வருகின்றன.

இந்நிலையில் கத்தாரில் பிறந்து மூன்று வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா தாக்கி உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியான குழந்தைக்கு வேறு எந்த மருத்துவ அறிகுறிகளும் தெரியவரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தாரி இதுவரை 2 பச்சிளம் குழந்தைகள் கொரோனாவால் பலியானதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.

Von Admin