35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி, மிசிசாகா நகரில் இடம்பெற்ற விபத்தில் 35 வயதுடைய சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர்உயிரிழந்தார். மார்க்கம் நகரை சேர்ந்த இவர் வீதியை கடந்து தனது வாகனத்திற்கு சென்ற போது வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு,படுகாயமடைந்தார். 

விபத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, டிசெம்பர் 24ஆம் திகதி மரணமானார். இந்நிலையில் அவரை மோதிய வாகனத்தின் சாரதி, அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மோதிய வாகனத்தின் சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல், சிசிரிவி அல்லது வேறேதும் காணொளி பதிவுகள் இருப்பவர்கள், பொலிஸ் அல்லது குற்றத் தடுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயிரிழந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கை சொந்த இடமாக கொண்டவர் என்று2ம் இவர், கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்ததுடன் , லொறி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

மேலும் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், இலங்கைக்குச் சென்று திருமணம் செய்து கொண்ட சுரேஸ் தர்மகுலசிங்கம், டிசெம்பர் 11ஆம் திகதி கனடாவுக்குத் திரும்பிய நிலையில், சில நாட்களில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Von Admin