மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொவிட்-19 தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த தொற்று இடம்பெற்றுள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான மாணவர்கள் கல்வி கற்ற வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் உயிர் குமிழி முறைமையின் கீழ் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொற்றுறுதியான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

Von Admin