நாவற்குழியில் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் சேதமடைந்த மின்கம்பம் அருகிலிருந்து ட்றான்ஸ்போமருடன் மோதியதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளன.

இதனால் தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கின்றது. மேலும் குறித்த விபத்தில் வாகனம் சேதமடைந்தபோதும் அதில் பயணித்தவர்கள் ஆபத்தின்றி தப்பித்துள்ளனா்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சரி காவல்துறையறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Von Admin