• Di. Nov 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாகிஸ்தானில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈழத்தமிழ்பெண்

Jan 19, 2022

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வாழ்ந்து, குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி, பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச தர போட்டியில் பங்குகொள்ள அண்மையில் சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று(18) பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50 – 55 கிலோக்கிராம் எடைப்பிரிவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில், தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடியுள்ளார்.

பெருமை தேடிக்கொடுத்த அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed