• Mi. Nov 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

Jan 19, 2022

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு பூவரசம் குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று வேளையில் தவறி விழுந்துள்ளார்.

உடனயாக அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed