இலங்கையில் ரஷ்ய விஞ்ஞானிகள் மூவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இலங்கைக்கேயுரிய அரிய வகையான பூச்சிகளை இவர்கள் சேகரித்ததற்காக 14,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் குறித்த மூவரும் அபராதம் செலுத்தும் வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் மார்ச் 21, 2022 க்கு முன் அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.