கனடாவில் அண்மையில் திடீரென காணாமல்போயிருந்த தமிழ் யுவதியான பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அவர் இறுதியாக கடந்த 16 ஆம் திகதி அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் பின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

அவரை தேடி வந்த நிலையில் தற்போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவi’ யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Von Admin