சாவகச்சேரி மறவன்புலவு, தனங்கிளப்பு பகுதியில் வீடொன்றில் 62 வயதான முதியவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அவரது வீட்டின் விராந்தையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கிடந்த முதியவர் தொடர்பில் அயலவர்களால் சாவகச்சேரி பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் பரிசோதித்த போது குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்தது.

உயிரிழந்தவர் மறவன்புலன் தனங்கிளப்பை சேர்ந்த 62 வயதான சுப்பிரமணியம் தவராசா என்பராவார்.

இவரது குடும்பத்தின் யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் நிலையில் இவர் பல காலமாக தனித்தே வசித்து வருவதாக கூறப்படுகிறது. இறப்பு தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Von Admin