லண்டனில் இலங்கையர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி 6.55 மணியளவில் டவர் ஹேம்லெட்ஸ் கல்லறை பூங்காவில் இலங்கையரான ரஞ்சித் என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது 11 முறை அவரது தலையில் சுத்தியலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே மரணத்திற்கு காரணமென பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படுபவர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். அன்றையதினம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Von Admin