இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதாக முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இத்தகவலை முதியவர் அதிகாரிகளிடம் கூறினார்.

கடந்த புதன்கிழமை மாலை நோட்டிங்ஹாமில் உள்ள புல்வெல் என்ற இடத்தில் அமைந்துள்ள டெஸ்கோ எக்ஸ்ட்ரா பல்பொருள் அங்காடிக்கு அருகே குறித்த முதியவரை ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தனர்.

1938 ஆம் ஆண்டு பிறந்த அந்த முதியவர், தான் 12 வயதில் இருந்து வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டி வருவதாகவும், காவல்துறையால் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை என்றும் காவல்துறையிடம்  கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிர்ஷ்டவசமாக அவர் ஒருபோதும் விபத்துக்குள்ளாகவில்லை யாரு என்றுக்கும் காயம் ஏற்படுத்தவில்லை காவல்துறையினர்  கூறியுள்ளனர்.