யாழ்.ஏழாலை – களவா ஓடை பகுதியில் சுமார் 80 லீற்றர் கசிப்பு மற்றம் 21 லட்சம் பணம் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கசிப்பு வியாபாரம் இடம்பெறுவதாக தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கசிந்த நிலையில்,

சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதன்போது சுமார் 80 லீற்றர் கசிப்பு, மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள், மீட்கப்ட்டதுடன் கசிப்பு காய்ச்சிய ஒருவர் கைதானார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபருடைய வீட்டிலிருந்து சுமார் 21 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

Von Admin