020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (03) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் சுமார் 40,000 பேர் வரை பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியான பின்னர் மேலும் பலர் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றிருக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.