வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி பகுதியில் நடைபெற்றுள்ளது.

கரணவாய் கலட்டி கீரிப்பல்லி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரமூர்த்தி நிதர்சன் (வயது 26) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள நுகவில் வயலில் தனது சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த நபருக்கான அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை எனவும் விசப்பூச்சிகள் எதுவும் கடித்திருக்கலாம் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin