• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் கட்டாய தடுப்பூசி? வாக்கெடுப்பு நடத்த அரசு ஒப்புதல்!

Feb 6, 2022

சுவிஸ் அரசாங்கம் கட்டாய தடுப்பூசி விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டுமா, வேண்டாமா, என மக்களே தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவேண்டுமெனில், அதற்கு முதலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களாவது இந்த வாக்கெடுப்பு வேண்டும் என்று கையெழுத்துக்களை சமர்ப்பிக்கவேண்டும்.

அதன்படி, 100,000 கையெழுத்துகளுக்கு மேல் சேகரிக்கப்பட்டன, அதனை அதிகாரிகளும் சரிபார்த்துவிட்டனர்.

இதற்காக, சுமார் 125,000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வாக்கு அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு, 125,015 செல்லுபடியாகும் கையொப்பங்கள் இருப்பதாக அதிபர் அலுவலகம் அறிவித்தது.

இதமூலம், வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் கட்டாய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், சுவிட்சர்லாந்தின் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ், அரசாங்கம் குறிப்பிட்ட குழுக்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் சுதந்திரத்தை அரசாங்கம் தடுக்கும் எந்தவொரு நோக்கத்தையும் நிராகரிக்க வேண்டும் என wirbestimmen எனும் வாக்கெடுப்பு அமைப்பாளர்கள் விரும்புகிறார்கள்.

இந்த அமைப்பு „சுதந்திரம் மற்றும் உடல் ஒருமைப்பாட்டிற்காக“ என்ற தலைப்பில், யாரும் தங்கள் விருப்பத்திற்கு எதிராக தடுப்பூசி போட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவிக்க அனுமதிக்கப்படுவது ஒரு அடிப்படை உரிமை மற்றும் நம்பிக்கையின் விஷயம் என்று முன்முயற்சி இணையதளம் வாதிடுகிறது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed