சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 31 வயதானவர் எனவும் கூறப்படுகின்றது.

 கடந்த வெள்ளிக்கிழமை வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில்,  குறித்த இளைஞரை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

  எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபாக நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.