இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல்–நுணசை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று மதியம் வெடித்துச் சிதறியுள்ளது.

இன்று மதியம் சமையல் முடித்துவிட்டு வெளியே வந்தவேளை குறித்த அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.எனினும் வீட்டிற்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Von Admin