கால்நடை தீவன விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முட்டையின் உற்பத்தி செலவை ஒப்பிடுகையில், தற்போதைய சந்தை விலையில் முட்டைகளை விற்க முடியாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இது தொடர்பில் அதிகாரிகள் தலையிடவில்லை என்பதால், முட்டை உற்பத்தியில் ஈடுபடும் சிலர் அந்த தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய ,எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை எட்டும் எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.